world

img

குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்ததில் 7 பேர் காயம்  

ஆப்கானிஸ்தானில் வீட்டில் விளையாடும் பொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.  

ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மர்ஜா மாவட்டத்தின் ஒரு வீட்டில் குழந்தைகள் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விளையாடும் பொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.  

இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல் செய்தி வெளியிட்டன. மேலும் ஒரு குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது. தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

இதுகுறித்து விசாரித்ததில், குடும்பத்தின் குழந்தைகள் பொம்மை போன்ற சாதனத்தை கண்டுபடித்து, அதை வைத்து விளையாடுவதற்காக தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று சாதனம் செயலிழந்து வெடித்தது.  

முன்னதாக இதேபோன்று ஆப்கானிஸ்தானின் ஃபரியாப் மாகாணத்தின் தலைநகரான மைமானாவில் வெடிகுண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் காயமடைந்தனர் குறிப்பிடத்தக்கது. 

;