world

img

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 5800 பேருக்கு கொரோனா....  அமெரிக்காவில் தொடரும் சோகம்....   

வாஷிங்டன் 
அமெரிக்காவில் ஆட்சி அதிகாரம் மாறியதிலிருந்து அங்கு கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு சராசரியாக 80 ஆயிரத்துக்குள் உள்ளது. காரணம் நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிரடியாக 6.6 கோடி பேருக்கு தடுப்பூசி தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்டதால் கொரோனா பாதிப்பு சற்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திய பின்பு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி விளக்கமளித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியும் பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் 60 வயதை கடந்தவர்கள். பாதிக்கப்பட்ட 5800 பேரில் 396 பேர் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது பைசர்-பயோஎன்டெக், மோடெர்னா ஆகிய தடுப்பூசிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

;