world

img

மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவித்திடுக.... பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை....

வாஷிங்டன்:
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ராணுவத்தின் இந்த அராஜக நடவடிக்கையை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பொது சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல்அல்ல. மியான்மரில் ராணுவத்துக்குஎதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைதுசெய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்”என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக் காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

;