tamilnadu

img

பாலியல் குற்றங்களை விசாரிக்க செங்கல்பட்டில் போக்சோ நீதிமன்றம்

செங்கல்பட்டு,டிச.15- செங்கல்பட்டில் போக்சோ நீதிமன்றம், ஆலந்தூரில் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம் மற்றும் சுங்கத்துறைக்கான சிறப்பு நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றம் தொடக்க விழா ஞாயிறன்று (டிச. 15) செங்கல்பட்டில் நடை பெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் நீதிமன்றங்களை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநராராயணன் பேசியதாவது:- தமிழகத்தில் 16 போக்சோ நீதிமன்றன்கள்  தொடங்க முடிவு செய்யப்பட்டு, விழுப்புரம், தஞ்சை,  நகை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டு விட்டது. தற்போது செங்கல்பட்டில் திறக்கப்பட்டுள்ளது. மற்றவை இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்ப டும். 2016 ஆம் ஆண்டு இந்தியாவில்  1,06,958  குற்றங்கள் நடந்துள்ளது. இதில் போக்சோ சட்டத்தில் கீழ் 36,022  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு பெற்றோர்கள் முக்கிய காரணம். இதற்கு அயனா வரம் வழக்கு ஒரு உதார ணம். அந்த குழந்தை எப்போது பள்ளிக்கு செல்கிறது. எப்போது திரும்ப வருகிறது என அவர்கள் கண்காணிக்கவில்லை. இதுவே குற்றத்திற்கு முக்கிய காரணம். மேலும் பெற்றோ ர்கள் தங்கள் குழந்தை களுக்கு நல்ல தொடுதல் மோசமான தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி யில் நடந்தவைகளை  கேட்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும். நடந்த பின் தண்டனை வழங்கு வதை விட வரும் முன் தடுக்க வேண்டும். குழந்தைகள் உதவி தொலைபேசி எண்1094 பலருக்கு தெரியவில்லை. இது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கும் அவரது குடும்பங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.  பெண் குழந்தை களுக்கு எதிராக நடை பெறும் பாலியல் குற்றங்களை மட்டுமே நாம் கண்காணிக்கிறோம். ஆனால் ஆண் குழந்தை களுக்கு எதிராக நடை பெறும் பாலியல் குற்றங்களை நாம் கண்டு கொள்வதில்லை. இதனால் ஆண் குழந்தைகளுக்கு எதி ரான குற்றம் அதிகரித்து ள்ளது. இதனையும் தடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா,  மாவட்ட ஆட்சி யர்கள் செங்கல்பட்டு அ.ஜான் லூயிஸ், காஞ்சி  பா.பொன்னையா, சென்னை சீதாலட்சுமி, கூடுதல் மாவட்ட நீதிபதி ராமநாதன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, நீதிபதி கபீர், மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குடும்ப நல நீதிபதி கீதா ராணி, கூடுதல் சார்பு நீதிபதி அனுஷா, காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். செங்கல்பட்டு அழகேசன் நகரில் துவங்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டவுடன் நீதிபதி வேல்முருகன் தலைமையில் மூன்று வழக்குகள் விசா ரிக்கப்பட்டது குறிப்பிட த்தக்கது. 

;