tamilnadu

img

எதற்காக கிருஷ்ணர் - அர்ச்சுணர் ஒப்பீடு? மீண்டும் பாரதப் போர் நிகழ விரும்புகிறாரா, ரஜினி?

ஹைதராபாத்:
பிரதமர் மோடியையும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவையும், மகாபாரதக் கதையில் வரும் கிருஷ்ணர் - அர்ச்சுணர் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் சட்டம் 370- ரத்து செய்யப்பட் டதை பாராட்டியே இவ்வாறு ரஜினி கூறியிருந்தார். இதற்கு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.“அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றால் எங்கு குருஷேத்திரபோர் நடக்கிறது; மண்ணுக்காக மகாபாரதத்தில் போர் நடந்தது போலகாஷ்மீர் மண்ணுக்காக இவர்கள் போர் செய்ய போகிறார்களா? போர் வரும் என்றால் யார் கர்ணன்?” என்றுசமூகவலைத்தளங்களிலும் பலர் ரஜினிக்கு கேள்விகளை எழுப்பி இருந்தனர். 

“பாஜக-விற்கு எதிரான காஷ்மீர்மக்கள் யார்? அவர்களை என்னசொல்லி அழைப்பீர்கள். அவர்கள்என்ன போரில் மடிய போகும் அப் பாவி மக்களா?” என்றும் ரஜினிக்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், மஜ்லிஸ் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைசியும், ரஜினிக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.“ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்காக, அமித்ஷா- மோடியை கிருஷ்ண ரோடும் அர்ச்சுணரோடும் ஒப்பிட்டு,ஒரு பெரிய நடிகர் பேசியுள்ளார். அப்படியென்றால் யார் பாண்டவர்கள், யார் கவுரவர்கள்? என்பதையும் அவர் சொல்லி விட்டால் நல்லது.நாட்டில் இன்னொரு பாரதப் போர் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?” என்று ஓவைசி கேட்டுள்ளார்.

காஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்துகுறித்தும், ஒவைசி விமர்சித்துள்ளார்.“தற்போது இருக்கும் அரசானது, காஷ்மீரிகள் மீது அன்பு கொண்டிருக்கவில்லை. காஷ்மீரின் நிலத்தின் மீதுதான் ‘பாசம்’ கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் மீதுதான் பற்று. நீதியின் மீது பற்று கிடையாது. அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பதுதான் முக்கியம். நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், யாரும் சாகாவரம் பெற்றவர்கள் இல்லை. எப்போதும் ஆட்சி செய்துகொண்டே இருக்கப் போவதும் இல்லை” என்று ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.

;