tamilnadu

பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

வேலூர், மே 15-8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வாலாஜாபேட்டை வட் டம், வன்னியமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அரக்கோணம் வட்டம், பெருமாள்ராஜ் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தனது தாத்தா வீட்டுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் விடுமுறைக்கு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் (43), அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து காதை அறுத்ததுடன், அருகே உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இதுகுறித்து அரக் கோணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 9 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப் பளித்தார். மேலும் சிறுமியை கடத்திச் சென்றதற்கு 7 ஆண்டுகள், நகையை பறித் ததற்கு 7 ஆண்டு கள், மற்றும் திட்டமிட்டு தவறு செய்ததற்கு 3 ஆண்டு என 17 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ் வொரு பிரிவுக்கும் தலா ரூ.1,000 அபராத மும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.இதில் அபராதம் விதிக் கப்பட்ட ரூ.9 ஆயிரத்தை கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த தொகை போதுமானதாக இல்லாததால் இறந்த சிறுமியின் பெற்றோருக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கார்த்திகேயன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;