tamilnadu

img

டிரம்ப் கூறுவது பொய், புரளி

வூஹான்:
சீனாவின் வூஹான் வைரஸியல் கழகத்திலிருந்து புதிய ரக கொரோனாவைரஸ் பரவவில்லை என்று வௌவால் பெண் என அழைக்கப்படும் வைரஸியல் நிபுணர் ஷி ஜெங் லி தெரிவித்துள்ளார்.சீனாவின் சிஜிடிஎன் ஊடகத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், வூஹான் ஆய்வகத்திலிருந்து இவ்வைரஸ் பரவியது எனக் கூறப்படுவது முற்றிலும் பொய். ஜனவரியின் தொடக்கத்தில் இந்த வைரஸின் மரபணு வரிசையைநாங்கள் ஆராய்ச்சி செய்தபோது எங்களிடம் இருந்த மாதிரிகளின் மரபணு தொகுதியுடன் ஒத்துப்போகவில்லை. அதனால், இது புதிய ரக கொரோனா வைரஸ் என்பதை உறுதி செய்தோம்.

வூஹான் வைரஸியல் கழகத்தில் உள்ள பி3 ஆய்வகம் 10 ஆண்டுகளாகவும், பி4 ஆய்வகம் 2 ஆண்டுகளாகவும் இயங்கி வருகிறது. இவை மிகவும் பாதுகாப்பாக உள்ளன; இதுவரை எவ்வித கசிவும் ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.டிரம்ப் போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் பொய்,அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் இத்தகைய புரளியைப் பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

;