tamilnadu

img

சிதம்பரத்தில் நூலகம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ

சிதம்பரம், செப்.2- சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த நூலக கட்டிடத்தை நவீன  முறையில் கட்டுவதற்கு முதல் கட்ட மாக ரூ.20 லட்சத்தை சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில்  ஒதுக்கியுள்ளதை பொது மக்கள் வர வேற்றுள்ளனர். சிதம்பரம் நகரம் காசுகடைதெரு வில் கடந்த 1955-ஆம் ஆண்டு கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்டது. இது முதல் நிலை  நூலகமாக கடந்த 1982ஆம் ஆண்டு  தரம் உயர்த்தப்பட்டது. 50 ஆண்டு கள் சிறப்பாக இயங்கி வந்த இந்த  நூலகம் கட்டிட வசதி சரியில்லாத தால் கடந்த 2006ஆம் ஆண்டு சின்ன காஜ தெருவுக்கு மாற்றப்பட்டது. இந்த நூலகத்தில் இந்திய ஆட்சிப்பணி மற்றும் குடிமைப்பணி நூல்கள் உட்பட 167014 நூல்கள் உள்ளது. 16350 பேர் உறுப்பினராக உள்ளனர். நூல் இரவல் 55296 உள்ளது. நூல்களின் மொத்த பயன்பாடு 222310 ஆகும். 103  புரவலர்கள் உள்ளனர். பெரும்புர வலர் ஒருவர் உள்ளனர். தினந்தோ றும் 1500 வாசகர்கள் வந்து செல்கி றார்கள். இதில் மாணவர்கள் 50 பேர்  வருகிறார்கள். இந்த கட்டடத்தின் மேல்கூரை பழு தாகியுள்ளதால் கடந்த ஐந்து ஆண்டு களுக்கு மேலாக தண்ணீர் ஒழு கிறது. இதனால் சிதம்பரம் நகரத்திலே  புதிய நூலகம் கட்டுவதற்கு கடந்த 2012-லிருந்து நூலகத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன்,  நக ராட்சித் தலைவர் பவுசியாபேகம் ஆகி யோரின் முயற்சியால் நகராட்சி அலு வலகத்திற்கு அருகிலே கச்சேரி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுரஅடியில் இடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கட்டிடம் கட்டுவதற்கு பணம் இல்லாமல் நூலகத் துறை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லாடி வந்தது.  இதற்காக 1300 சதுர அடியில் மூன்று அடுக்கில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட நூலகர் பாலசரஸ்வதி தலை மையில் சிதம்பரம் நூலகர்கள் முத்துக்குமரன், ரகுநந்தனன் உள்ளிட்ட ஊழியர்கள் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டி யனிடம் நூலகம் கட்டுவதற்கு நிதி  ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொகுதி மேம்பாட்டு  நிதியில் முதல் கட்டமாக ரூ. 20  லட்சத்தை உடனடியாக ஒதுக்கி அதற்கான உத்தரவையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து நூலகர்கள் கூறு கையில்,“ முதல் தளம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் தேவைப்படுகிறது. இதில்  நூலகத்துறை ரூ.20 லட்சம் ஒதுக்கு கிறது. எம்எல்ஏ நிதி ரூ. 20 லட்சம்  கிடைத்துள்ளது. சிதம்பரம் தொகுதி  மக்களவை உறுப்பினர் திருமாவள வனையும் சந்தித்து நூலகம் கட்டு வதற்கு நிதி கேட்கவுள்ளோம். தற்போது கிடைத்த நிதியை கொண்டு  ஒரு மாதத்தில் பணியை தொடங்க வுள்ளோம்” என்றார்.

;