tamilnadu

img

ஆளும் கட்சியின் அத்துமீறல்- முறைகேடுகளைத் தடுத்திடுக!

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,டிச.31- உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கையின் போது ஆளும் கட்சியின் அத்துமீறல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்  களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து அவர் தொண்டர்க ளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரை யும் விஷத்தையும் ஊற்றி அழித்துக் கொண்டி ருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் காதுகளைத் திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தர விட்டது உயர்நீதிமன்றம். வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடு களை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது அவர்கள் நடத்தவிருக்கும் தில்லு முல்லுகளைத் தடுத்திடவும் திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்  பட்டிருந்தது.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளையும் அதனை முறையாகப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலி யுறுத்திப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டி ருந்தன. “ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி  வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  வாக்குகள் ஒரே பெட்டியில் போடப்பட்டி ருப்பதால், அவை தனித்தனியாகப் பிரிக் கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்பதால் அதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்” என்பதே அந்த மனு வின் முக்கிய அம்சமாகும். கழகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்  திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாக்கு எண்ணிக் கையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டு களை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதை யும் கழக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியா யத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணை யத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சித்  தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான்  என்றும், அதனை நடைமுறைப்படுத்துவ தாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பி யிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, வழக்கினை முடித்து வைத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமா கவே முன்வந்து விசாரித்த வழக்கில் 30.12.2019 அன்று நீதியரசர்கள் வேல் முருகன்  மற்றும் தரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மிக முக்கியமானவை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு அறையிலும் இரு சிசிடிவி கேம ராக்கள் வைக்க வேண்டும். ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைச் சம்மந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை அதிகாரியின் கையெழுத்து மற்றும் சீல் உடன் 3.1.2020 மாலை 5 மணிக்  குள் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் (நீதித் துறை) அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

பெறப்பட்ட அந்த சிசிடிவி கேமரா காட்சி கள் அடங்கிய பதிவினை நீதிமன்ற பதிவா ளர் (நீதித்துறை) தன் பாதுகாப்பில் வைத்துக்  கொள்ளவேண்டும். வாக்கு எண்ணிக் கையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும். தமிழகத்தில் 27 மாவட்டங்களில், இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்த 14 மாவட்டங்களுக்கான உத்தரவு மீதமுள்ள 13 மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

நீதியின் மாண்பு காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கிறது தி.மு.க. நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணை யம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கி றார்கள். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கவ னித்து, ஆளுந்தரப்பின் அத்துமீறல்களை யும் முறைகேடுகளையும் தடுத்திட வேண்டி யது அவசியமாகும். திமுக சட்டத்துறை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும். உயர்நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக் கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட் டுள்ளார்.

;