tamilnadu

img

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடுக

மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஆக. 14- தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி அருகே இலக்கியம்பட்டி ஊராட்சி, பாரதிபுரம் புது வாழ்வு பெத்தானியா மறுவாழ்வு மையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவ லர் எம்.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் சரவணன், தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான் ஆகியோர் பங்கேற்று, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்க ளின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பவர்கள் மாற்றித்திறனாளி நல அலுவலர் எம்.பால கிருஷ்ணனிடம் மனு அளித்தனர். இதனை பெற்றுகொண்ட அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித் த்தார். முன்னதாக, இந்த மறுவாழ்வு மையத்தில் தொழுநோ யால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாற்றுத் திறனாளிக ளுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை, குடியிருப் புக்கு அடிப்படை வசதிகள் கேட்டு தொடர்ந்து அதிகாரிகளி டம் முறையிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்தே மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல துறை யின் மூலம் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முகா மினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

;