tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி தலைவரை தாக்கிய உதவி ஆய்வாளர்

திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கடும் கண்டனம்

திருவள்ளூர், ஏப்.21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.கதிர் வேலை கடுமையாக தாக்கிய மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர்  மாரிமுத்து மற்றும் தற்காலிக காவ லர் சுப்பைய்யா ஆகியோர் மீது  மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் வலியுறுத்தி உள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் பகுதி முன்னணி  தலைவர்களில் ஒருவரான  பி.கதிர்வேல் 19ஆம் தேதி காலை  மீஞ்சூர் பஜார் வீதியில் தினசரி பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

காட்டூர் சாலையில் கே.கே.சினிமா திரையரங்கம் எதிரில் சில ரது இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சீருடை அணியாத இருந்த ஒருவர்  கூட்டத்தை கலைந்து போகும்படி கூறியிருக்கிறார். அப்போது, கதிர்  வேலிடம் வண்டியை சாவியை கேட்டிருக்கிறார். அதற்கு தான் நடந்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால்,  சீருடை அணியாத  அந்த நபரோ கதிர்வேலை தரக் குறைவான வார்த்தைகளில் திட்டி யுள்ளார். இதனால் அங்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனிடையே அங்கு வந்த மீஞ்சூர் காவல் உதவி  ஆய்வாளர் மாரிமுத்து கதிர் வேலை தாக்கியுள்ளார். மேலும்  காவல்நிலையத்திற்கு இழுத்து சென்று பூட்ஸ் காலால் மிதித்  துள்ளனர். அவர்மீது பொய்  வழக்கையும் பதிவு செய்துள்ள னர்.

40 ஆண்டுகள் சேவை...

காவல்துறையினரின் இந்த அராஜகத்திற்கு கண்டனம் தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச்  செயலாளர் கோபால் வெளி யிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்  வருமாறு: 62 வயதாகும் பி.கதிர்வேல் 40  ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  நலனுக்காக  பணியாற்றி வருகி றார். தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு அமைப்புகளில் மாவட்ட  அளவில் பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி யின் மீஞ்சூர் ஒன்றிய செயலாள ராக 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது ஊரக  உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார்.  கொரானா தடுப்பு நடவடிக்கை யில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு, அடிப்படை தேவைகளை  பெற்று தருவது போன்ற  பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

மக்களுக்காக பணியாற்றும் கதிர்வேலின் வயதைக் கூட  பொருட்படுத்தாமல் பொதுமக் கள் முன்னிலை யில் தாக்கிய தோடு மட்டுமின்றி ஒரு குற்றவாளி யைப் போல் இழுத்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கதிர்வேல் சிபிஎம் கட்சி யின் தலைவர் என்பது உதவி ஆய்  வாளருக்கு தெரியும். இருப்பினும் வேண்டுமென்றே தாக்கி அவ மானப்படுத்தியுள்ளார். எனவே மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர் சுப்பையா ஆகி யோர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
 

;