tamilnadu

img

யுத்தத்தை நோக்கித் தள்ளும் இந்திய குடியுரிமைச் சட்டம்....பாக். பிரதமர் இம்ரான்கான் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசுகையில், இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.“ஏற்கெனவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். இதன்மூலம் இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடும். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க முடியாது. இது வெறும் அகதிகள் பிரச்சனையாக மட்டும் அல்லாமல் இரண்டு அணு ஆயுத நாடுகளையும் போர் முனைக்கு இட்டுச் செல்லும். இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்ததோடு, அசாமில் முஸ்லிம்களின் குடியுரிமையையும் பறித்தது. தற்போது இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது” என்று இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

;