tamilnadu

img

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது...  

லாகூர் 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. எனினும் கடந்த வாரத்திற்கு நடப்பு வார கொரோனா பாதிப்பு விகிதம் சற்று குறைந்துள்ளளது. 

இந்நிலையில் அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 2 லட்சத்து 6 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 49 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 95 லட்சத்து 407 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

பாகிஸ்தானில் கொரோனாவை கட்டுப்படுத்த இது சாதகமான நேரம் ஆகும். காரணம் கடந்த ஒரு வார காலமாக அங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி சில கட்டுப்பாடுகலுடன் தீவிரமாக அரசு பணியாற்றினால் கொரோனாவை எளிதாக விரட்டலாம். ஆனால் பாகிஸ்தான் அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது தான் காலம் சொல்லும்.  

;