tamilnadu

img

கொரோனா வைரஸ்...  இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 600-யை தாண்டியது 

ரோம்
தெற்கு ஐரோப்பா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனத்துடன் பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு   விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும் கடந்த 24 மணிநேரத்தில் 70-க்கும் அதிகமானவர்கள்  கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 8,500-க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தாலியில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.  தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இத்தாலி அரசு தன் நாட்டு மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கோன்டே  அறிவித்துள்ளார். 

;