tamilnadu

img

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 6400 பேருக்கு கொரோனா... 

ரியோ 
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்குக் கிழக்கு கடற்கரை மாநிலங்கள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் 6 ஆயிரத்து 562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 79 ஆயிரத்து 361 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு ஜெட் வேகம் என்றால் பலி எண்ணிக்கை மின்னல் வேகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 511 ஆக உள்ளது. முக்கியமாகக் கடற்கரை நகரமான சாவோ பவுலோ கொரோனாவால் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. அங்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

பிரேசிலில் இதுவரை 34 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;