tamilnadu

img

அலி அலியேவ் மல்யுத்த தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

ரஷ்யாவில் நடைபெற்ற அலி அலியேவ் மல்யுத்த தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றுள்ளார்.


ரஷ்யாவின் காஸ்பிஸ்க் நகரத்தில் அலி அலியேவ் மல்யுத்தப்போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். பஜ்ரங் புனியா இறுதிப்போட்டியின் ஆரம்ப கட்டத்தில் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் பின் தங்கி இருந்தார். பின்பு அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரஷ்ய வீரர் விக்டர் ரசாதின்னை வீழ்த்தி 13-8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கொண்டார்.


இவர் கடந்த வாரம் சீனாவில் நடந்த ஆசிய மல்யுத்தப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


;