tamilnadu

img

நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பலை

பாஜகவும், நரேந்திர மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற பொதுவான சூழல் நிலவுகிறது. நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. நாட்டின் மதச்சார்பின்மை, சுதந்திரம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க இந்தத் தேர்தலை முக்கியமான வாய்ப்பாக மக்கள் கருதுகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத்திற்கு ஏற்படும் ஆபத்து  விவரிக்க முடியாதது. இதனால் பாஜக தோற்கடிக்கப் படும் என்ற பொதுவான உணர்வு எழுந்துள்ளது. அத னால்தான் பிரதமர் அப்பட்டமாக வகுப்புவாதப் பிரச்சாரம் செய்கிறார். இது ஒரு குறிப்பிட்ட மதக் குழுவிற்கு எதிரான - வேண்டுமென்றே நடத்தும் வகுப்புவாதமாகும். இந்த ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் மதச்சார்பின்மை தொடர்பாக பல பிரச்சனைகள் எழுந்தன. நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்-சின் தீவிரவாத செயல்திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை மேற் கொண்டுள்ளது. அந்த கட்டத்தில், அனைத்து மதச் சார்பற்ற சக்திகளும் அவர்களை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தன. கேரளமும் பாஜகவை முற்றாக நிராகரிக்கிறது.

;