tamilnadu

img

இராமநாதபுரம், திருவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

 ஸ்ரீவில்லிபுத்தூர், மே 22- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வலையபட்டி துணை மின்நிலையத்தில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட செய லாளர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் உள்ள நகர் துணை மின் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் ராமசாமி, தொமுச சார்பில் ஜெயபால், ஏஐடியுசி சார்பில் ஆவுடையப்பன் சாலைப்போக்குவரத்து சிஐடியு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர் .வத்ராயிருப்பு துணை மின் நிலை யம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு மின்வாரிய எம்பிளோயீஸ் பெட ரேஷன் சார்பில் மாயாண்டி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் ரமா கந்தன்உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்

அனைத்து தொழிற்சங்கங்கள் 

அனைத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் திருவில்லி புத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி களில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நக ராட்சி அலுவலகம் ,வட்டாட்சியர் அலுவலகம் ,ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  உள்பட 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர்  அர்ஜுனன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி  உட்பட பலர் கலந்து கொண்டனர் .  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார் வேலுச் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் நகரில் சிஐடியு ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில்  5 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு நகர கன்வீனர் சுப்பிரமணியன் சிஐடியு நிர்வாகிகள் மாரியப்பன் ,சிவஞானம், ஏஐடியூசி சார்பில் நிர்வாகிகள் ரவி வேல்சாமி, ஐ என் டியூ சி சார்பில் பிரபாகரன் பாலமுருகன் ஹெச்எம் எஸ் சார்பில் அந்தோணி மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .ராஜபா ளையம் கிழக்கு ஒன்றியத்தில் அய்யனாபுரம் ,சத்திரப்பட்டி இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி ,விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சோம சுந்தரம், மாநில குழு உறுப்பினர் முனியாண்டி, கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் காளிமுத்து, ஏஐடியுசி சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர் பி முத்துமாரி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஏழு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் ,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் குருசாமி ,மாவட்ட க்குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் ,ஏஐடியுசி சார்பில் வீராசாமி கணேசமூர்த்தி மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்ராயிருப்பு ஒன்றியத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .சிஐடியு சார்பில் பழனிச்சாமி, ஜீவானந்தம், மகேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மணிக்குமார் ,ஏஐடியுசி சார்பில் கோவிந்தன், தங்கம், சிபிஐமுன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

போக்குவரத்து தொழிலாளர் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஸ்ரீவில்லிபுத்தூரில் கிளை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார் .ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் முனீஸ்வரன் கிளை பொருளாளர் கண்ணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுநல அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம் உட்பட பலர் கலந்து கொண்டனர்   ராஜபாளையம் கிளை-1 முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குவீரராகவன் தலைமை தாங்கி னார் .கிளை-2 முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சன்னாசி தலைமை தாங்கினார்.

துப்புரவு தொழிலாளர் 

சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் பேருந்து நிலையத்தில்  சங்கத் தலைவர் கருப்பையா தலைமையில்  ஆர்ப்பாட் டம் நடைபெற்றது சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் திருமலை, சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார்  பேசினர் 

இராமநாதபுரம்

தனியார்மய நடவடிக்கைகளை எடுக்கும் பாஜக அரசை கண்டித்தும் கொரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளை உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் வழங்க கேட்டும் அனைத்து சங்க தொழிலாளர்கள்  இராமநாத புரமாவட்டத்தில் 30க்கும்மேற்பட்ட இடங்களில் ஆவேச ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்  இராம நாதபுரத்தில் ஐந்து இடங்களில் நடந்த போராட் டத்தில்சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்சிவாஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,எல்பிஎப் மோகன், ஏஐடியுசி நிர்வாகி முருகபூபதி மற்றும் ஐக்கிய சங்க நிர்வாகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரமக்குடி போக்குவரத்து பணிமனை முன்பு திரண்ட தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.   சிஐடிடி நிர்வாகிகள் டிராஜா,எஸ்ஆர் ராஜன்,முனியசாமி மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 இராமேஸ்வரத்தில் 5 க்குமேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் சிஐடியு நிர்வாகிகள் கே.கருணாகரன் ,எம் கருணாமூர்த்தி, ஞானேகரன் ,சிவா ,டி.ராமச் சந்திரபாபு , ஜஸ்டின் மற்றும் முத்து முனியாண்டி முத்துக்குமார்(எல்பிஎப்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தொண்டியில் சிஐடியு நிர்வாகிகள் எஸ்ஏ.சந்தானம்,நாகூர் பிச்சை சராசா , எம னேஸ்வரத்தில் எம்ஆர் முரளி ,டி.எம்.கோவிந் தன், கமுதியில் 2 க்கும்மேற்பட்ட இடங்களில் சிஐடியு நிர்வாகிகள் முத்து விஜயன் ,ராமர், இஞ்ஞாசிமுத்து மற்றும் ரூபன் ,பனைக்குளத் தில் சிஐடியு நிர்வாகிகள் மாலா உள்ளிட்டோரும் வாலிநோக்கத்தில் சிஐடியு நிர்வாகிகள் கே பச்சமால், குமரவடிவேல்  ஏர்வாடியில் 2 இடங்க ளில் டி. நம்புராஜன் மற்றும் நிர்வாகிகள் சுப்புத்தேவன் வலச உள்ளிட்டு 3 இடங்களில் சிஐடியு நிர்வாகி சுடலைக் காசி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.     சிஐடியு  சங்கங்களின் சார்பில்    கீழக்கரை இந்து பஜாரில் ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலை வர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மகா லிங்கம், மாரியப்பன், கட்டுமானத் தொழிலாளர் கள் சங்கத்தின் சார்பில் வரகுண சேகரன், கருப்புச்சாமி, விக்டர்,ஆட்டோத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் செல்வவிநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



 

;