tamilnadu

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாக மயில்களுக்கு தண்ணீர், உணவு வசதி கோரி வழக்கு

மதுரை, மே 16-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளமயில்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதி செய்துதரக்கோரி கோரி புதிதாக வழங்கப் படும் மனு அடிப்படையில் 15 நாட் களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டையை சேர்ந்த தனபதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,” புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் அலுவலகம் ராஜகோபால தொண்டைமான் மன்னனுக்கு சொந்தமான இடத்தில் சுமார்96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள் ளது. மக்கள் அணுகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 1977-ஆம் ஆண்டு ராஜகோபால தொண்டைமான் மன்னன்34 லட்சம் ரூபாய்க்கு தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார்.அப்போது பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் இருந் தன. மயில்கள் குரங்கு உள்ளிட்ட பல்வேறு பறவைகளும், விலங்குகளும் அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தன. ஏராளமான குளங்களும் இருந்தன. 1974-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரங்கள் நடப்பட்டதால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாறிவிட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. சுமார் ஆயிரம் மயில்கள் இருந்த நிலையில், கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்துபல மரங்கள் வேரோடு சாய்ந்ததில் பல மயில்கள் இடம் பெயர்ந்துவிட்டன. தற்போது 500 மயில்கள் இந்தப் பகுதியில் உள்ளன. கடும்வறட்சி காரணமாக அனைத்து குளங்களும் வறண்டுவிட்டன. இதனால் உயிர் வாழ ஏதுவான சூழல் இன்றி மயில்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகநடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை செய்துதர உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்குவந்தது. அப்போது, அரசுத்தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், அதனடிப்படையில் 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

;