tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 லட்சம் கோடி உள்ளது.... வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கம் தகவல்....

மதுரை:
 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு 51 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது பொதுத்துறை வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.145 லட்சம் கோடி உள்ளது. பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்பட்டு வந்த சேமிப்பு  தனியார்வசமாகி அவர்களின் நலன்களுக்கு மட்டும் பயன்படும். சேமிப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். 1913- ஆம் ஆண்டிலிருந்து 1968-ஆம் ஆண்டு வரை 1,639 தனியார் வங்கிகள் திவால் ஆகியுள்ளன. 1961-ஆம் ஆண்டிலிருந்து  1968-ஆம் ஆண்டு வரை 263 தனியார் வங்கிகள் திவாலாகும் நிலையில் சில வங்கிகளோடு இணைக்கப்பட்டன.

தனியார் வங்கிகளின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு யெஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி. பொதுத்துறை வங்கிகள் கடந்த பத்து ஆண்டுகளில் 14 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன . வராத கடனை வசூல் செய்யாமல் பொதுத்துறை வங்கிகளின் லாபத்தில் இருந்து வராத கடனுக்கு ஒதுக்குவது, வராத கடனை தள்ளுபடி செய்வதும் வங்கித் துறையை வலுவிழக்கச் செய்யும். எட்டாண்டுகளில்  பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட 6 லட்சத்து 32 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளன. இதில் 100 கோடிக்கு மேல் கடன் பெற்ற தொழிலதிபர்கள், கார்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன் மட்டும் 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிக் கட்டாத பெரும்தொழில் அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுத்துறை வங்கிகளை ஒப்படைப்பது நியாயமற்றது நாட்டின் நலனுக்கு எதிரானது என பெபி, ஏஐபிஇஏ உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மதுரையில் திங்களன்று தெரிவித்தனர். மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி  மார்ச் 15 16 ஆகியதேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

;