tamilnadu

img

மண்ணை கவ்வப்போகும் கங்கனா ரணாவத்!

கங்கனா ரணாவத்! பாலிவுட்டில் மோடி புகழையும் இந்துத்துவா நச்சுக்கருத்துகளையும் உயர்த்திபிடிக்கும் நடிகை! இவரைப் பொறுத்தவரை தேசம் விடுதலை அடைந்தது 1947 ஆகஸ்ட் இல்லையாம்! 2014ல் மோடி பிரதமர் ஆனதுதான் விடுதலை நாளாம்! இவர் இமாச்சல பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளர். இவர் நடித்த கடைசி 17 திரைப்படங்களும் சொல்லாமல் கொள்ளாமல் திரையரங்குகளை விட்டு ஓட்டம் பிடித்தன. தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக்கொண்டதுதான் மிச்சம். இதில் “சந்திரமுகி 2” தமிழ் படமும் அடங்கும்! 2021ம் ஆண்டு மண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த பொழுது போட்டியிடுமாறு இவருக்கு சிலர் ஆலோசனை தந்தனர். அப்பொழுது இவர் இமாச்சலப் பிரதேசம் வெறும் 70 லட்சம் மக்கள் கொண்ட சிறிய மாநிலம்; எனக்கு 2019லேயே குவாலியர் தொகுதி கொடுத்தார்கள்; நான் மிகவும் சவாலான தொகுதியில்தான் போட்டியிடுவேன் என ஜம்பம் பேசினார். ஆனால் இப்பொழுது மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார், அம்மணி அங்கு குப்புற விழுந்து, ஓட்டம் பிடிக்கப் போகிறார் என்று உள்ளூர் பத்திரிகைகள் கூறுகின்றன.

;