tamilnadu

சட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு.... அரியர்ஸ் சேர்த்து எழுத உத்தரவிடக்கோரி வழக்கு

மதுரை:
நடைபெற உள்ள இறுதியாண்டு  சட்டப்படிப்பு பருவத் தேர்வோடு, அரியர் பாடத்தையும் சேர்த்து தேர்வு நடத்த உத்தரவு  பிறப்பிக்க வேண்டும்  எனக் கோரிய மனுகுறித்து, டாக்டர் அம்பேத் சட்டப் பல்கலைகழகம், பதிவாளர், பல்கலை. மானியக் குழு  செயலாளர்  ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை  துவரிமான் பகுதியைச் சேர்ந்தமாணவி முத்துகவிதா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தமனு:
“நான்   மதுரை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு  சட்டபடிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன்.  கொரோனா  வைரஸ்தொற்றால் குறிப்பிட்ட  நாளில்  இறுதியாண்டு பருவத்தேர்வு நடைபெறவில்லை.  செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள்இறுதி பருவ தேர்வு நடத்தி முடிக்க வேண் டும் என்று டாக்டர் அம்பேத்கர்  சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து செப்டம்பர் 24-ஆம்தேதி முதல்  செப்டம்பர்- 29-ஆம் தேதி வரைஇறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களின்  அரியர் தேர்வு குறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

இறுதியாண்டு மாணவர்கள், இதற்கு முன் நடந்த பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களையும் சேர்த்து (அரியர்)  தேர்வு எழுத அனுமதி வழங்கினால்  தான்இறுதியாண்டு சட்டபடிப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.  இறுதியாண்டு மாணவர்களுக்கு அரியரையும் சேர்த்து எழுத வாய்ப்பு வழங்கினால் தான் தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவுசெய்யவும், தகுதித் தேர்வு எழுதவும் இதேகல்வியாண்டில்  வழக்கறிஞராக பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கும். எந்த அறிவிப்பும் இல்லாததால் அரியர் வைத்துள்ள    இறுதியாண்டு மாணவர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

எனவே நடைபெற உள்ள   இறுதியாண்டு சட்டபடிப்பு பருவத் தேர்வோடு சேர்த்து,  எனது அரியர் பாடத்தையும் சேர்த்துதேர்வு நடத்த உரிய உத்தரவு  பிறப்பிக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இந்த மனு திங்களன்று நீதிபதி  கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது அப் போது இது குறித்து, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகப் பதிவாளர்,  பல் கலை., மானியக் குழு செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

;