tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவச முகக்கவசங்கள் வழங்கப்பட்டன...

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மதுரை  மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு  முகக் கவசங்கள்  வழங்கப்பட்டன.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் அப்பகுதிக்கு உட்பட்ட பொன்னகரம் பிராட்வே மணல்மேடு, கிராஸ் ரோடு, கோமஸ்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம், கரிமேடு தேவசகாயம் மகப்பேறு மருத்துவனை மற்றும்  10 முதல்  15 உள்ள மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் முகக் கவசங்களை ஆடிட்டர் ராஜாவேல் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன், பகுதிகுழு செயலாளர் வை. ஸ்டாலின் மற்றும் பகுதிகுழு  உறுப்பினர்கள் மக்களுக்கு  வழங்கினர். 
 

;