tamilnadu

img

சி.ஆர்.பி.எஃப் படையினருக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு காவல்துறை!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அனுமதி மறுப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை வரை சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அலுவலக பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எஃப்) அவ்விடத்திற்கு விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உரிய அனுமதி பெற்ற பின்னரே மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 

;