tamilnadu

img

மதுரையில் கொரோனா தீவிரம் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் மூடல்...

மதுரை:
மதுரையில் ஒரே நாளில் 83 பேருக்குகொரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் புதிதாக 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 83 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மதுரையைச் சோ்ந்த 53 வயதுஆண் கொரோனா பாதிக்கப்பட்டு மாா்ச் 30 ஆம் தேதி தனியாா் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா், மூச்சுத் திணறல் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தற்போது வீடுகளிலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் 707 போ் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.இதையடுத்து அதிகம் கொரோனாபாதிப்பு கண்டறியப்பட்ட தெருக்களைமதுரை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக மூடி வருகின்றனர்.

பல்லவி நகர் மூன்றாவது தெரு(கலைநகர்) (3),இந்திராச சாலை (திருப்பாலை) (3), மீனாட்சியம்மன் நகர்- சூரியாநகர் (கோ.புதூர்) (8), வைரம்-வசந்தம் அபார்ட்மென்ட் (சம்பக்குளம்) (4), டெபுடிகலெக்டர் காலனி ஆறாவது தெரு (கே.கே.நகர்) (3), ரெங்கமநாயகி அம்மாள் தெரு (காமராஜர் சாலை) (3), ஹரினி தெரு (துரைச்சாமிநகர்) (7), நைலான் நகர் (பசுமலை) (7), சம்பந்தர் தெரு, சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு-காரல்மார்க்ஸ்நகர் (விளாங்குடி) (3), அருண்மலர் கான்வெட் தெரு (கேகேநகர்)  (3),  ஆலவாய்நகர் (கரிசல்குளம்) (4), ராமகிருஷ்ணா குறுக்குத்தெரு (நேருநகர்) (3), நான்காவது கிழக்குத் தெரு பொன்னிலாநகர்-சூரியாநகர் (கோ.புதூர்) (3), மகாத்மாபள்ளி பிரதான சாலை (கே.கே.நகர்) (4), வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு (வில்லாபுரம்) (3) , ஆறுமுகம் ஆசாரிதெரு (தெற்குவாசல்) (7), நேதாஜி பிரதான சாலை-காளிமுத்து நகர் (சம்மட்டிபுரம்) (3) இவை கட்டுப்பாட்டுப்பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ளவை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.

;