tamilnadu

img

ஆடு, மாடு மேய்க்கத் தடை: வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஆக. 21- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடு,  மாடு மேய்க்க தடைவிதிக்கும் வனத்துறை யினரைக் கண்டித்து தமிழ்நாடு மலைமாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதி களவில் கால்நடைகளை வளர்த்து விவசாயி கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் செங்கம் பகுதியை சுற்றி  ஏராளமான தரை காடுகள்  உள்ளன.  இந்தக் காடுகளில் கால்நடை களை  மேய்ப்பதற்கு வன அலுவலர்கள் தடை  விதித்துள்ளனர். இதனால் கால்நடை களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே 2006 வன உரிமை சட்டப்படி வன மகசூலை எடுப்பதற்கும், ஆடு, மாடுகள்  மேய்ப்பதற்கு உள்ள உரிமையைத்  தடை  செய்யக் கூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் இரா.சரவணன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;