tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படாத நிலையிலும் தொடரும் துப்புரவு பணியாளர்களின் அசாத்திய சேவை

பெரம்பலூர், மார்ச் 23- உலகை அச்சுறுத்தி வரும் கொரோ னா வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 22-ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு இருந்தது.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக் கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்து, லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. சாலை கள் வெறிச்சோடின. இதனிடையே அம்மா உணவகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பெரம்பலூரில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களும் மூடப்பட்டன. இத னால் ஆதரவற்ற ஏழை மக்கள் உணவு கிடைக்காமல் பாதிப்படைந்தனர். மேலும் பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் எவ்வித பாது காப்பு உபகரணமின்றி மக்கள் ஊரடங்கு என்ற போதும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் இருந் தாலும் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமலிருக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்பவர் கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

;