tamilnadu

img

இடதுசாரி - அம்பேத்கரிய அணி வெற்றி

ஹைதராபாத் பல்கலைக் கழக தேர்தல்
 

ஹைதராபாத், செப்.28- ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் (2019-20) மதவாத சக்திகளை வீழ்த்தி இடதுசாரி - அம்பேத்கர் அமைப்பு களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி நிறுவனங்களின் மீது, குறிப்பாக உயர்கல்வி நிறு வனங்களின் தன்னாட்சி மீது தொடர்ச் சியானத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இதன் அடுத்த கட்ட மாக, பல்கலைக்கழகங்களில் செயல் படும் ஜனநாயக அமைப்புகளை யும், மாணவர் பேரவை அமைப்பு களின் ஜனநாயக செயல்பாடுகளை யும் தடுத்து நிறுத்தி அதனை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற் கொண்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது, தலித், பழங் குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட சாதியினருக்கான இட ஒதுக் கீட்டை முறையாக அமலாக்காது அம்மாணவர்களின் உயர்கல்வி கற் கும் வாய்ப்பினை மறுக்கும் நட வடிக்கைகளையும் ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) துணையுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய ஜனநாயக விரோத நட வடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், மாணவர் உரிமைகளைப் பாது காக்கவும், வகுப்புவாத மதவாத அமைப்புகளை வீழ்த்தி மதச்சார் பின்மை மற்றும் ஜனநாயக பாரம் பரியத்தை பாதுகாக்கவும் இடது சாரி-அம்பேத்கரிய-பழங்குடி அமைப்புகள் ஒன்றிணைந்து அணி அமைத்தன. இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), அம்பேத்கர் மாணவர் பேரவை (ஏஎஸ்ஏ), தலித் மாண வர் அமைப்பு (டிஎஸ்யு) மற்றும் பழங்குடி மாணவர் முன்னணி (டிஎஸ்எஃப்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றிணைந்து ஒரு அணி, ஏபி விபி தலைமையில் ஒரு அணி, முஸ் லிம் மாணவர் அமைப்புகள் ஒரு அணி, ஒய்ஐஎஸ்எஸ் எனும் அமைப்பு மற்றும் ஒரு சுயேச்சை என ஐந்து முனைப் போட்டி நடந்தது. செப்.26 அன்று நடைபெற்றத்  தேர்தலில், மாணவர் பேரவைத் தலைவராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அபிஷேக் நந்தன் 2205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி -ஓபிசிஃப்-எஸ்எல்விடி வேட்பாளரை விட 1102 வாக்குகள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. அதேபோல், இடதுசாரி-அம் பேத்கரிய அமைப்பின் மற்ற வேட்பா ளர்களும் பெரும் வாக்குவித்தியா சத்தில் வெற்றி பெற்றனர். தலித் மாணவர் அமைப்பின் ஸ்ரீசரன் துணைத் தலைவராகவும் (வாக்கு வித்தியாசம் 679), அம்பேத்கர் மாண வர் பேரவையின் கோபி சுவாமி பொதுச் செயலாளராகவும் (வாக்கு வித்தியாசம் 876), பழங்குடி மாண வர் முன்னணி-ன் ராதோட் பிரதீப் இணைச் செயலாளராகவும் (வாக்கு வித்தியாசம் 916) வெற்றி பெற்ற னர்.

விளையாட்டுச் செயலாளராக இந்திய மாணவர் சங்க சோஹல் அஹமத்தும் (வாக்கு வித்தியாசம் 625), கலாச்சாரச் செயலாளராக அம் பேத்கர் மாணவர் பேரவையின் பிரி யங்கா பத்ரா செட்டியும் (வாக்கு வித்தியாசம் 793) வெற்றி பெற்ற னர். மாணவர் பேரவையின் அனைத்துப் பொறுப்புகளுக்கும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, ஏபிவிபி-யினரை மண்ணைக் கவ்வ வைத்து இடது சாரி-அம்பேத்கரிய மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதி ரான விழிப்புணர்வுக் குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் தலித் மாண வர் அமைப்பின் சார்பில் போட்டி யிட்ட புட்டபகா சாய் ஸ்ரீ (இன்டெக ரேடட்), அம்பேத்கர் மாணவர் பேர வையின் கலைவாணி (முதுகலை), இந்திய மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்ட இந்திரா டாயெங் ஆகி யோரும் வெற்றிபெற்றனர். மேலும், இந்த அணி பெரும்பாலான கவுன் சிலர் பதவிகளையும் கைப்பற்றி யது.

நாடெங்கும் மதவாத ஏபிவிபி-க்குத் தோல்வியே தொடர்கிறது

நாடு முழுவதும் உள்ள பல்க லைக் கழகங்களில் மதவாத ஏபிவிபி மாணவர் சங்கத்திற்கு எதிராகவே காற்று வீசியடிக்கிறது. மதவாதத்தை யும் இந்துத்துவாவையும் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதையும் பல் கலைக் கழக மாணவர்கள் நிராக ரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என் பதே இந்த எதிர்க்காற்றின் அடை யாளம். தில்லி ஜவகர்லால் நேரு பல்க லைக் கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாண வர் சங்கங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றன. தில்லி அம்பேத்கர் பல்க லைக் கழக மாணவர் சங்கத் தேர்த லில் இந்திய மாணவர் சங்கக் கூட்ட மைப்பு வெற்றிக் கீதம் இசைத்தது. கேரளத்தில் மகாத்மா காந்தி பல்க லைக் கழகம், மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர் தல்களில் இந்திய மாணவர் சங்கம் சாதனை வெற்றிபெற்றது. அத்தனை ஹாஸ்டல்களிலும் வெற்றிபெற்றது. புதுச்சேரி பல்கலைக் கழகத்திலும் இந்திய மாணவர் சங்கக் கூட்ட மைப்பு வேட்பாளர்களே வெற்றி பெற்றுச் சாதித்தனர். இவ்வாறு நாடெங்கும் பல்கலைக் கழக மாண வர் சங்கத் தேர்தலில் மதச்சார்பற்ற - மதநல்லிணக்கச் சிந்தனை கொண்ட இந்திய மாணவர் சங்கக் கூட்ட மைப்பு மகத்தான வெற்றிபெற்று வரு கிறது; மதவாத-இந்துத்துவா சிந் தனை கொண்ட ஏபிவிபி மாணவர் சங்கம் படுதோல்வி அடைந்து வரு கிறது.

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கக் கூட்டமைப்பு அத் தனை பதவிகளுக்கும்  அடைந்த வெற்றியானது மக்கள் ஜனநாயகத் திற்கு வலுசேர்த்திருக்கிறது என்றும், நாட்டில் பல்கலைக் கழகங்களில் மதவாதத்தையும், ஆர்எஸ்எஸ் அஜெண்டாவையும் திணிக்கப் பார்ப்பவர்களுக்கு இந்த மகத்தான வெற்றி பலத்த அடியாகும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தெலுங் கானா மாநிலத் தலைவர் ஆர்.எஸ்.மூர்த்தி, செயலாளர் டி.நாகராஜு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
 

;