tamilnadu

img

நாடாளுமன்ற வீதியில் தொழிலாளர்கள் பேரணி....

தில்லி நாடாளுமன்ற வீதியில் ‘கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம்’ என்று முழங்கி இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்ட பேரணி/ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் உரைநிகழ்த்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம், மக்களவை உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோரும், தொமுச பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சண்முகம், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன தலைவர் சுக்பீர் சிங், பொதுச் செயலாளர் வீ.சசிக்குமார், துணைத் தலைவர் தேபஞ்சன் சக்கரவர்த்தி, சிஐடியு அகில இந்திய செயலாளர்கள் சுவதேஷ் தேவ் ராய், ஏ.ஆர்.சிந்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை மக்களவை சபாநாயகரை நேரில் சந்தித்து சங்கத் தலைவர்கள் அளித்தனர்.

;