tamilnadu

img

என் தந்தையை கொன்றது யார்? பேலுகான் மகன் கேட்கிறார்

புதுதில்லி:
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பேலுகான் (55) என்ற பால் வியாபாரி, கடந்த 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி, ராஜஸ் தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரோர் என்ற இடத்தில் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஜெய்ப்பூர் சந்தையில் கறவை மாடுகள் வாங்கிவந்த இவரை, ‘முஸ்லிம்’என்ற ஒரே காரணத்திற்காக, பசுவைக் கடத்திச் செல்கிறார் என்று கூறி, அடித்துக் கொலை செய்தார்கள். பேலுகானின் மகன்கள் இர்ஷாத், ஆரிப் மற்றும் வாகன ஓட்டுநர் கான் முகம்மது ஆகியோர் குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்கப்பட்டனர். 

ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் 6 பேரையும், ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தது. இதுநாடு முழுவதும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பேலுகான் குடும்பத்தினரை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.இந்நிலையில், “விடுதலை செய்யப்பட்ட 6 பேரும்என் தந்தையைக் கொலை செய்யவில்லை என்றால், வேறு யார்தான், என் தந்தையை கொலை செய்தது?” என்று பேலுகானின் இளைய மகன்இர்ஷாத் கேள்வி எழுப்பியுள்ளார். “நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பித்த வீடியோவில், எனது தந்தையை சம்பந்தப் பட்ட கும்பல் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருந்தும் அந்த வீடியோவை ஏற்க முடியாது; அதுபொய் என்றால், என் தந்தைவேறு எப்படித்தான் இறந் தார்?” என்று கேட்டுள்ள இர்ஷாத், “இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது;போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள் ளார். மேலும், “வாழ்வதற்கு உரிமையற்ற இந்த நாட்டில்,இனிமேல் நாங்கள் சாகத்தான் வேண்டும் போலிருக்கிறது” என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

;