tamilnadu

img

நிலவில் விக்ரம் லேண்டரை நிச்சயம் தரையிறக்குவோம்

புதுதில்லி:
சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் நிச்சயம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ  தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, ஆர்பிட்டரிலிருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி பிரித்து விடப்பட்டவிக்ரம் லேண்டர், நிலவின்மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்தது.  லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய குழுஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.இந்நிலையில் ஐஐடி தில்லியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர்  சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரைநிச்சயமாக தரையிறக்குவோம். விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்முறையில் செய்து பார்க்க வேண்டும். நாங்கள் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

;