tamilnadu

img

இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை!

திஸ்பூர்:
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலைவழங்கப்பட மாட்டாது என்று அசாம் மாநில பாஜக அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அசாம் மாநிலத்தில், பாஜக ஆட்சிநடைபெற்று வருகிறது. சர்பானந்த சோனோவால் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற அசாம் மாநிலஅமைச்சரவைக் கூட்டத்தில், பல முக் கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 2021-ஆம் ஆண்டு ஜனவரி1-ஆம் தேதி முதல், ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை’ என்ற முடிவையும் அசாம் அரசு எடுத்துள்ளது.2017-ஆம் ஆண்டு செப்டம்பரில், அசாம் சட்டப்பேரவையில் ‘அசாமின்மக்கள்தொகை மற்றும் பெண்களுக்குஅதிகாரமளித்தல் கொள்கை’ (Population and Women Empowerment Policy of Assam) நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையிலேயே, சிறிய குடும்ப விதிமுறையின்கீழ், 2021 ஜனவரி முதல் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு அரசாங்கப் பணி கிடையாது என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது, அரசு வேலைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப்பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

;