tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் நீடிக்கும் துயரம்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500 ரொக்கப் பணம் வழங்குக!

22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை

புதுதில்லி, மே 23- கோவிட்-19 தொற்று காரணமாக நாடே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிற நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் ரொக் கப்பணம் அளித்திட வேண்டும், இலவச ரேஷன் பொருள்கள் அளித்திட வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 22 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் புதுதில்லி யில் ஏப்ரல் 22 வெள்ளியன்று மாலையில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலா ளர் து.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதாத் தளத் தலைவர் எச்.டி. தேவகவுடா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் முதலானவர்கள் கலந்து கொண்டார்கள்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் முதலானவர்களும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் உரைநிகழ்த்திய 22 கட்சித் தலை வர்களுமே மத்திய அரசாங்கம் மாநில அர சாங்கங்களின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை யாற்றுகையில், பிரதமர் அலுவலகம் அனைத்து  அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்துக் கொண்டிருப்பதன் மூலம் கூட்டாட்சித் தத்து வத்தை மறந்து விட்டார்கள் என்றார். (விபரம் பக்கம் 6)

கூட்டறிக்கை

கூட்டத்தின் முடிவில், அனைத்துக் கட்சிக ளும் இணைந்து 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:      கோவிட் 19-கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கிற அசாதார ணமான நிலைமைகள் குறித்து 22 அரசி யல் கட்சிகளும் இன்றையதினம் தங்கள் கருத்து க்களைப் பகிர்ந்துகொண்டன. பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடும் நெருக்க டிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வாழ்வாதா ரங்கள் அழிந்துவிட்டன. உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த இக்கட்டான தருணத்தில் நாடு முழு வதும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்கான வேலைகளில் தங்களை முழு மையாக அர்ப்பணித்துக் கொண்டு வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் பொது சுகாதார ஊழியர்களுக்கு, அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர், துப்புரவு ஊழியர்கள், குடிதண்ணீர், மின்சாரம் போன்று இன்றியமையாப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் ஊழியர்கள் அனை வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை யும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, தைரியத்துட னும் அர்ப்பணிப்புடனும் ஆபத்தான இந்தப் பணியை ஆற்றிவரும் அவர்களின் கடமையு ணர்ச்சிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி காலத்தில் மத்திய அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திட தயாராக இருக்கி றோம். ஆனால், மத்திய அரசுதான் தன் கடமைக ளைக் காலத்தே, வலுவாகவும், கூருணர்வுட னும் செய்வதில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசு ஏராளமான அறிவிப்புகளைச் செய்திருக்கிறது. எனினும், அவை மக்களின் துன்பதுயரங்களைப் போக்கக்கூடியவிதத்தில் அர்த்தமுள்ளதாக அதில் எதுவும் இல்லை. விவ சாயிகள்,விவசாயத் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், இதர தொழிலாளர்கள், நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவினர், சிறு தொழில் அதிபர்கள் என எவ ருக்கும் எந்தப் பயனையும் இவை அளித்திட வில்லை.  மாறாக உண்மையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள கூட்டாட்சி ஜனநாயக உரிமைக ளைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு தன்னைத்தானே பீற்றிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல. மிகப்பெரிய அளவில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய நேரம் இது. நாட்டு மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள். மத்திய அரசு, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் திட்டமிட்டமுறையில் கலந்துரையாடி, செயல்பட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுக்களைச் செயல்பட வைத்திட வேண்டும். மாநில அர சாங்கங்களுக்கு நிதி உதவி மற்றும் உதவிகளை நேர்மையானமுறையில் செய்திட வேண்டும். இங்கே அமர்ந்திருக்கிற 22 எதிர்க்கட்சி களும் நாட்டின் மக்கள் தொகையில் 60 சத வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள். எனவே மத்திய அரசாங்கம் எங்கள் கோரிக்கைக ளைக் கேட்டு, கீழ்க்கண்ட 11 கோரிக்கைகளை யும் பரிசீலித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கோரிக்கைகள்

1 வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத அனைத்துக் குடும்பத்தின ருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 7,500 ரூபாய் நேரடி ரொக்கப்பணம் (Direct Cash  Transfer) ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும். இதில் பத்தாயிரம் ரூபாய் உடன டியாக அளித்திட வேண்டும். மீதமுள்ள தொகைகளை ஐந்து தவணைகளில் பகிர்ந்து அளித்திட வேண்டும்.

2 தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் பத்து கிலோ உணவு தானி யங்கள் இலவசமாக விநியோகித்திட வேண்டும். 

3  மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலைநாட்களை 200 நாள்களாக உயர்த்திட வேண்டும். அதற்கேற்ற விதத்தில் பட்ஜெட் ஒதுக்கீடும் செய்திட வேண்டும்.

4 புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இலவசமாக செய்து தரப்பட வேண்டும்.அதேபோன்று வெளிநாடுகளில் இந்தி யாவிற்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை இந்தியா கொண்டு வருவதற்கு உடனடியான மற்றும் நம்பக மான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக துல்லியமான தகவல்களை அளித்திட வேண்டும். சோதனைக் கருவி கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  தொற்று பரவாமல் தடுத்திட என்னவித மான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருக்கின்றன என்பதைத் தெரிவித்திட வேண்டும்.  

6 மத்திய அரசே ஒருதலைப்பட்சமாக மேற்கொண்டுள்ள அனைத்து முடிவுகளை யும், குறிப்பாக தொழிலாளர் நலச்சட்டங்க ளை ரத்து செய்திருப்பதை, திரும்பப் பெற வேண்டும்.

7 அறுவடை செய்யப்பட்டு, விவசா யிகளிடம் தேங்கிக் கிடக்கும் விவசாய விளைபொருள்கள் அனைத்தையும் குறைந்தபட்ச ஆதார விலையில் அர சாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். வரவிருக்கும் விவசாய உற்பத்திக் காலத்தில் விவசாயிகளுக்குத் தேவைப் படும் விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் இதர இடுபொருட்களை அளித்திட வேண்டும்.

8 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முன்னணியில் நின்று போராடிக்கொண்டி ருக்கும் மாநில அரசாங்கங்களுக்கு, போது மான நிதி ஒதுக்கிடு விடுவிக்கப்பட வேண்டும்.

9 சமூக முடக்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான உத்தி ஏதேனும் இருந்தால், அதனை மத்திய அரசாங்கம், தெளிவான வார்த்தைகளில் தெரிவித்திட வேண்டும்.

10 நாடாளுமன்ற நடவடிக்கைகளை உட னடியாக மீளவும் கொண்டுவர வேண்டும். வறுமை ஒழிப்பு தொடர்பாக ஒரு தெளிவான மற்றும் அர்த்தம் உள்ள பொருளாதார உத்திகளில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சாரம் செய்வது மட்டும் போதுமானதல்ல.

11 நாடாளுமன்ற நடவடிக்கைகளை உட னடியாக மீளவும் கொண்டுவர வேண்டும். வறுமை ஒழிப்பு தொடர்பாக ஒரு தெளிவான மற்றும் அர்த்தம் உள்ள பொருளாதார உத்திகளில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சாரம் செய்வது மட்டும் போதுமானதல்ல.

(ந.நி.)

 
 



 

;