tamilnadu

img

பெரும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.7.78 லட்சம் கோடி; ஏழைகளுக்கு வெறும் ரூ.1.70 லட்சம் கோடிதானா?

சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுதில்லி, மார்ச் 27- கோவிட்-19-கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக, மத்திய நிதி யமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பு போதுமானதல்ல என்றும், இது இத்தொற்றின் சமூகப் பரவலைத் தடுப்பதற்கான குறிக்கோளைத் தோல்வியுறச் செய்துவிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நேரத்தை வீணாக்காதீர்கள். இரண்டு மாத காலத்திற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு எடுக்காததாலும் சமூக முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பு மத்திய அரசாங்கம் எவ்விதத் திட்டமிடலையும் மேற்கொள் ளாததாலும் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிதி நெருக்கடியைச் சமன் செய்து கொள்வதற்கான காலம் இதுவல்ல. பெரும் பணக்காரர்களின் கடன்கள் சுமார் 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளு படி செய்யும் உங்களுக்கு, நிதிப்பற்றாக்குறை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து, தொற்றைத் தோற்கடித்திட வேண்டும்.

புலம் பெயர் தொழிலாளர்களின் கதி

வியாழனன்று அரசால் அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிற முக்கிய பிரச்சனையைத் தவறவிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்த இந்தி யர்களை விமானங்கள் மூலம் பத்திரமாகக் கொண்டு வந்த நாம், இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சொந்த சகோதரர்களுக்கும் நிச்சயமாக உணவும், தங்கு வதற்கான இடமும் அளித்திட வேண்டும், அல்லது அவர்களின் சொந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திட வேண்டும். இதைச் செய்யத் தவறு வோமானால், நாட்டின் பல மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் கூட்டமாக உள்ள இவர்கள் அலை அலையாக வந்து, கொரோனா தொற்றின் ‘சமூகப் பரவலை’ தடுப்ப தற்காக, 21 நாள் சமூக முடக்கத்தின் நோக்கமே தோல்வி யடைந்துவிடும். எனவே, உடனடியாக இதனைச் சரி செய்திட வேண்டும்.

ஊட்டச்சத்து தேவை

உணவு தானியங்கள் அளிப்பதை இரட்டிப்பாக்கி இருப்பது, மூன்று மாதங்களுக்கான இலவச சமையல் எரிவாயு அளிப்பது, ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ கிராம் அளவிலான தானியங்கள் அளிப்பது போன்று சில நல்ல முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், இவை நிச்சயமாகப் போதுமானதல்ல. கோவிட்-19 தொற்றை எதிர்த்து முறியடித்திட மிகவும் முக்கியமான அம்சம் நல்ல ஊட்டச்சத்து உணவை உட்கொள்வதாகும். எனவே, அரசு வெளியிட்டிருக்கிற முன்மொழிவுகள் இதற்கு உதவாது.

ஆயிரம் ரூபாய் போதாது

வயதான விதவைகளுக்கும், ஊனமுற்றோருக்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அவர்களுக்குத் தேவை, தங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உதவி. இதற்கு ஆயிரம் ரூபாய் எப்படிப் போதுமானதாகும்?

சுகாதார ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு எவ்விதச் செலவினமும் ஏற்படப் போவதில்லை. தனியார் துறை யையும் இது கட்டுப்படுத்துமா என்று விளக்கம் இல்லை. இந்த ஊழியர்களுக்கு உடனடித் தேவை என்ன வென்றால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வ தற்கான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் போது மான அளவிற்குப் பரிசோதனை செய்வதற்கான வசதி கள். இவை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம், ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டா யிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. உண்மையில் இது, பிரதமர் கிசான் யோஜனா (PMKY-PM Kisan Yojana) திட்டத்தின்கீழ் 2019 தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தொகையின் முதல் தவணையே யாகும்.

வெறும் 500 ரூபாயா?

பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அனைத்து ஜனதன் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கும் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

தொழிலாளர்களுக்கு உருப்படியான ஆதாயம் எதுவும் இல்லை. அவர்களின் சொந்த சேமநல வைப்பு நிதியிலிருந்து (PF-Provident Fund) அவர்களின் ஊதி யத்தில் 24 சதவீதம் அளிப்பது, எவ்விதமான கூடுதல் நிவா ரணத்தையும் அவர்களுக்கு அளித்துவிடாது. இது அவர்களின் சொந்த சேமிப்புப் பணமாகும், அவர் களுக்குப் போய்ச் சேரவேண்டிய தொகையாகும்.

இப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

  1.  அனைத்து ஏழை மக்களுக்கும், குறிப்பாக மதிய உணவுத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, ரேஷன் பொருட் கள் அனைத்தும் வழங்குவதன் மூலமாக பசி-பஞ்சம் -பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மையைக் கட்டுப் படுத்திட முடியும். கேரளம் இதைச் செய்து கொண்டிருக்கிறது.
  2.  மிகப்பெரிய அளவில் கதவடைப்புகள் மற்றும் பணி நீக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படு வதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.
  3. விவசாயிகள் அனைவருக்கும் அவர்கள் வாங்கி யுள்ள கடன்கள் அனைத்திற்கும் ஒரு தடவை தள்ளு படி அளிக்கப்பட வேண்டும்.
  4. இது அறுவடைக் காலம். உற்பத்தியான பொருட் களும் பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் அறுவடை செய்யப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். விவசாயிகள் அவற்றை அறுவடை செய்வதற்குப் பாது காப்பு அளித்திட வேண்டும். அவற்றை அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்திட வேண்டும்.
  5. மத்திய தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக ஊழி யர்களுக்கு, அவர்கள் வாங்கியுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு அளித்திட வேண்டும், அவர்களின் இஎம்ஐ என்னும் மாதாந்திர தவணைகளை (EMIs) நிறுத்தி வைக்க வேண்டும்.
  6. சுய உதவிக் குழுக்கள் கடன் வாங்கிக் கொள்ள லாம் என்று அறிவித்திருப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. ஏனெனில், நாட்டில் உள்ள 6 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் எவ்வித நடவடிக்கைகளுமின்றி ஸ்தம்பித்திருக்கின்றன. அவர்கள் வாழ்வதற்கும், சுகா தாரமாக இருப்பதற்கும் அவர்களுக்கும் பணம் கொடுத்து உதவ வேண்டும்.
  7. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MNREGA) கீழ், வழங்கப்படும் ஊதியங்களை 20 ரூபாய் அதிகரித்தி ருப்பதாக அறிவித்திருப்பது ஒரு ‘ஜோக்’ ஆகும். தற்போது எங்கும் வேலைகள் நடைபெறவில்லை. அவர்களுக்குத் தேவை நேரடி ரொக்கம் வழங்கல் (direct cash transfers) அல்லது பணிகள் நடந்தாலும், நடைபெறாவிட்டாலும் ஊதியங்கள் அளிக்கப்படுவதாகும். 


இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அறிக்கையில் கூறி யுள்ளார்.  

                       (ந.நி.)




 

;