tamilnadu

img

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு....  கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

சென்னை
நாட்டின் பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் செப் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் நுரையீரல் பகுதியில் தீவிர தொற்று ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  எஸ்.பி.பி நல்ல நிலையில் உள்ளார் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என  அவரது மகன் சரண் ரசிகர்களுக்கு அடிக்கடி வீடியோ மூலம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல் கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை. 

இந்நிலையில் இன்று மதியம் (செப் 25) 1.04 மணிக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. தனது அசத்திய குரலால் தென்னிந்திய மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள   எஸ்.பி.பி-க்கு  திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், நெட்டிசன்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.பி.பி-க்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த நிலையில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்ககளை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

;