tamilnadu

img

வெளிமாநிலங்களிருந்து திரும்பும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை...

இம்பால்
இந்தியாவில் 4-ஆம் கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்ட பொழுதிலும் கொரோனா வைரஸ் பரவல் தாறுமாறான வேகத்தில் உள்ளது. தினமும் 6000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் நாட்டின் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 24 மணிநேரத்திற்கு 150 பேர் பலியாகுவதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3728 ஆக அதிகரித்துள்ளது. 

குறிப்பாகக் கடந்த 5 நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காரணம் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் போது சிலர் கொரோனாவோடு திரும்புகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டாலும் தற்போது புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அடுத்த சிக்கலுக்கு மாட்டிக்கொண்டு விழிக்கின்றனர்.  

இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும். தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.  குறிப்பாக  மணிப்பூருக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்குப் பரிசோதனையில் நெகட்டிவ் இருந்தாலும் வீட்டுத் தனிமையில் தங்கவைக்கப்படுவார்கள் என  மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் எச்சரித்துள்ளார். 

;