tamilnadu

img

நாடாளுமன்றம்  கூடத் தயாராகிறது?

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கால் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 23ஆம் தேதியோடு முடிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் பற்றி குடியரசுத் துணை தலைவரான வெங்கையா நாயுடு முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வரும் வெங்கையா நாயுடு,   “நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு மார்ச் 23 அன்று காலவரை யறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அரசியலமைப்பின்படி கூட்டத் தொடர் முடிந்த ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். இவ்வகையில்வழக்கமாக ஜூலை மாதம் ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலகூட்டத் தொடர் தொடங்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக நிலைமை வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக மத்திய அரசும், மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்புகள் வரை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளின் நிலைக் குழுக்கள் இந்த மாதத்திலிருந்து தங்கள் கூட்டங்களை மீண்டும் தொடங்க இருக்கின்றன. நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மற்றும் மழைக் கால கூட்டத் தொடர் ஆகியவை பற்றி நானும் (ராஜ்யசபா தலைவர்) மக்களவைத் தலைவர் ஸ்ரீ ஓம் பிர்லாவும் சந்திப்புகளை நடத்தியுள்ளோம். தொற்று நோயைத் தவிர்க்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம். மழைக்கால அமர்வை உறுதி செய்ய அரசு இரு அவைகளின் அதிகாரிகளுடனும் பேசி வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;