tamilnadu

img

ஊரார்க்கு மட்டும்தான் உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லை.... கோகோய் நியமனத்தில் வெளுத்துப்போன பாஜக சாயம்

புதுதில்லி:
“இரு வகையான நீதிபதிகள் இருக்கிறார்கள். ‘சட்டத்தை’ நன்கு அறிந்தவர்கள் ஒருவகை, ‘சட்டத் துறை அமைச்சரை’ நன்கு அறிந்தவர்கள், மற்றொரு வகை. உலகிலேயேநீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் ஒரே நாடு இந்தியாதான். ஓய்வுபெறும் வயதில்கூட, நீதிபதிகள் ஓய்வுபெற விரும்புவதில்லை. நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்கும் தீர்ப்புகள்தான், ஓய்வுக்குப்பின் அவர்களுக்குரிய பதவிகளைத் தீர்மானிக்கின்றன”

-உச்சநீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அமைந்திருக் கும் இந்த கருத்தை முன்வைத்தவர் மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி. இப்போதல்ல, 8 ஆண்டுகளுக்கு முன்பு.“நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கண்டிப்பாக வேறு எந்த பதவியையும்,அதாவது நீதிமன்ற ஆணையங்கள்,தீர்ப்பாயங்களில் பணியாற்றக்கூடாது. 2 ஆண்டுகள் இடைவெளி வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், ஆளும் அரசுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீதிபதிகள் மீதும், நீதிமன்றங்கள் மீதும் தாக்கத்தை ஏற் படுத்தலாம். நம் நாட்டின் சுயமான, தன்னிச்சையான அமைப்பான நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது”
- இது மற்றொரு பாஜக தலைவரான நிதின் கட்காரி பேசிய பேச்சு.பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, கடந்த 2012, அக்டோபர் 1 அன்று பாஜகவின் சட்டப்பிரிவு கூட் டத்தில்தான் அருண் ஜெட்லியும், நிதின் கட்காரியும் இவ்வாறு உபதேசித்து இருந்தனர்.தற்போது, ரஞ்சன் கோகோய் நியமனம் மூலம் அது ஊருக்கான உபதேசம்தான்; பாஜக-வுக்கு இல்லை என்றாகி இருப்பதாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

;