tamilnadu

img

கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை... 

பெங்களூரு 
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் தற்போது 5-வது கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை  ஆல்-பாஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாநிலங்களில் 11-ஆம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வராததால் அடுத்து எப்பொழுது பள்ளிகள் கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   

தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பிற்கு ஒருபக்கம் ஆதரவும், ஒருபக்கம் எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என அம்மாநில உள்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார்.  அனைத்து மாணவர்களிடமும் ஆன்லைன் பயிற்சி பெற போதுமான தொழிநுட்ப வசதி இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

;