tamilnadu

img

குஜராத் அல்ல; தேவையானது கேரள மாதிரி.... வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா

புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேறியுள்ள கேரளம் இந்தியாவுக்கும் உலகத்திற்கும் மாதிரி என தெரிவித்துள்ள வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, நாட்டுக்கு தேவையானது குஜராத் மாதிரி அல்ல கேரள மாதிரியே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து என்டிடிவி இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையில், விஞ்ஞானம், வெளிப்படைத்தன்மை, அதிகார பரவலாக்கம், சமூக சமத்துவம் ஆகியவற்றால் கேரள மாதிரியானது வகைப்படுத்தப்படுகிறது. குஜராத் மாதிரியின் நான்கு தூண்கள் மூடநம்பிக்கை, இரகசியம், அதிகார மையப்படுத்தல் மற்றும் மதவெறி. 1970 களில் வளர்ச்சிக்கான ஆய்வுகள் மையத்தின் பொருளாதார வல்லுநர்கள் கேரள மாதிரியை விவரித்தனர். குஜராத் மாதிரியை விளக்கிய, நரேந்திர மோடியால் அது என்ன என்பதை துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் பெண்கள் உள்ளிட்டோரின் கல்வி நிலையை உயர்த்தியது போன்றவை கேரள மாதிரியின் சிறப்பு. மூலதனத்திற்கு முக்கியத்துவம் அளித்ததே குஜராத் மாதிரியாகும்.

கல்வி மற்றும் சமூகத் துறையில் அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள கேரளாவால் முடிந்தது. கேரளாவின் அரசியல் கலாச்சாரமும் இதற்கு பயனளித்தது. எங்களுக்கு கேரள மாதிரியை கொடுங்கள் என்று கூறி அந்த கட்டுரை முடிகிறது.

;