tamilnadu

img

வெறுப்புணர்வு மூலம் எந்த நாடும் வளர முடியாது.. வியன்னா இந்திய மாணவர்கள் அறிவுரை

புதுதில்லி:
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரைப் பறித்தாலும், அஞ்சாமல் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.இந்நிலை யில், குடியுரிமைச் சட்டத்திருத்தத் திற்கு எதிராக வியன்னா நாட்டில் ஆய்வுப் படிப் பில் ஈடுபட்டு வரும் இந்திய மாணவர்களும் குரல் எழுப்பியுள்ளனர். “வெறுப்புணர்வால் எந்த நாடும் வளர முடியாது; இந்தியச் சிந்தனைக்கு எதிரானதாக, தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் உள்ளது. போராடும் மாணவர்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளையும் காட்டி, வியன்னா மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

;