tamilnadu

img

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு ஆய்வில் தகவல்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை கடந்த மாதம் 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.


இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE-Center for Monitoring Indian Economy) இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை குறித்ததான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அதிகளவில் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் வேலைவாய்ப்பின்மை 6.71 சதவிகிதமாக அதிகரித்திருந்த நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) இது 7.16 சதவிகிதமாக புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2018 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 10 பேர் வேலையிழந்ததாக கூறியிருந்தது.


மேலும், பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்களில் ஏற்பட்ட வேலையிழப்பு குறித்ததான தகவல்கள் ஏதும் இல்லை என மத்திய மோடி அரசு நாடாளுமன்றத்தில் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.


;