tamilnadu

img

‘யெஸ்’ வங்கியை ‘காப்பாற்ற’ எஸ்பிஐ சேமிப்பை சூறையாடுவதா? மத்திய பாஜக அரசுக்கு ஐஏஎஸ் அதிகாரி கண்டனம்

புதுதில்லி:
‘யெஸ்’ வங்கிக்கு உதவுவதற்காக, எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் சேமிப்பை சூறையாடக் கூடாது என்று ஐஏஎஸ்அதிகாரி அசோக் கெம்கா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கிஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோருக்கு, ஐஏஎஸ் அதிகாரிஅசோக் கெம்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“யெஸ் வங்கியின் தற்போதைய நிதி நெருக்கடிக்குக் காரணம், வங்கியில் நடந்துள்ள ஊழல் ஆகும். ‘யெஸ் வங்கி’,ஐ.எல். அண்ட் எப்.எஸ்.,டி.எச்.எப்.எல்., பி.எம்.சி.ஆகிய அனைத்து வங்கிகளும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. நிர்வாகிகளின் மோசமான நிர்வாகம், தவறானஅணுகுமுறை, கவனக்குறைவு, தணிக்கையாளர் கள், கடன் ஆய்வாளர்கள், அதிகார மட்டத்தில் இருப்போரின் அலட்சியம் போன்றவை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக, மேற்கண்டவங்கிகளின் தணிக்கையாளர் கள், கடன் ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.அதைவிடுத்து, ‘யெஸ்’ வங்கியின் கடன் நெருக்கடியைச் சமாளிக்க, ஸ்டேட் பாங்க் இந்தியாவின் பணத்தை அள்ளிக்கொடுப்பது, நியாயமற்ற செயல் ஆகும்” என்று அசோக்கெம்கா குறிப்பிட்டுள்ளார்.ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா, தனது நேர்மையான பணிகளுக்காக, கடந்த 27 ஆண்டுகளில் 52 முறை இடமாற்ற நடவடிக்கைக்கு உள் ளாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;