tamilnadu

img

வறுமையில் தள்ளப்படுவோர் அதிகரிப்பு... பெரும் அடிவாங்கிய வளரும் நாடுகளின் பொருளாதாரம்...

புதுதில்லி:
“கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிந்தைய புதிய உலகளாவிய பொருளாதார நெறிமுறை” என்ற தலைப்பில், அமெரிக்காவின் ‘பான் ஐஐடி’ இணையவழி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது.இதில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு பேசியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் என்பது கட்டுப்படுத்துவதற்கு கடினமானதாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று, மிகப்பெரியஅளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது. இனியும் புதிதாக ஊரடங்கு போடப்படுமா, அது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கப் போகிறது என்று தொழில், வர்த்தக துறையினருக்குத் தெரியாது.

வளர்ந்த நாடுகளில் 45 முதல் 50 சதவிகிதத்தினர் வீடுகளில் இருந்துவேலை பார்க்க முடியும். எனவே இந்த நாடுகள், ஊரடங்குக்கு மத்தியிலும் செயல்பட இயலும். ஆனால், ஏழை நாடுகள், வளர்ந்து வரும்நாடுகள், புதிதாகத் தோன்றி வருகிற சந்தைகள் போன்றவற்றில் வீட்டில்இருந்து வேலை செய்வது என்பது குறைவாகவே இருக்கிறது.அங்கெல்லாம் ஊரடங்குகளால் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வறு
மைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள், அமெரிக்க - சீன மோதலால் ஏற்படுகிற உலகளாவிய வர்த்தக பாதிப்பைப் பயன்படுத்தித்தான் நெருக்கடியில் இருந்துமீண்டு வெளியே வர வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

;