tamilnadu

இந்திய ஊதியச் சட்ட விதிகளில் ஓட்டைகள் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் விமர்சனம்

புதுதில்லி, ஆக.27- மத்திய அரசு, நாட்டில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத் தையும் ஒருங்கிணைத்து, ஊதியச் சட்ட விதிகள் (Wage Code Rules) என்று கொண்டுவந்திருப்பதில் உள்ள ஓட்டை களை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் புதிய ஊதியச் சட்டம் தொடர்பாக வரைவு விதி கள் வெளியிட்டிருக்கிறது. இது தொடர் பாக மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தபின் விரைவில் அறிவிக்கை வெளியிடவும் இருக்கிறது. இந்த வரைவு விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனம் சார்பாக “விவாத ஆவணம்: ஊதியச் சட்டம் மற்றும் விதிகள்” (“Discussion Paper: Wage Code and Rules”) என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊழியர்களின் ஊதியம் எந்தெந்த அம்சங்களின்கீழ் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் எதுவும் இல்லை என்றும், அதேபோல் அதை அவ்வப்போது எப் படி மாற்றியமைத்திட வேண்டும் என்பது குறித்தும், அதனை வீட்டில் வேலை செய்திடும் தொழிலாளர்களுக்கு எப்படிப் பிரயோகிப்பது என்பது குறித் தும் எதுவும் இல்லை என்றும் சுட்டிக் காட்டி இருக்கிறது.   சர்வதேச தொழிலாளர் ஸ்தாப னத்தில் ஊதியம் தொடர்பான நிபுண ரான சேவியர் எஸ்டுபினன் (Xavier Estupinan) மற்றும் வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிலையத்தில் பணி யாற்றும் அனூப் சத்பதி, மத்திய பொரு ளாதாரப் பணிக்குழு (Indian Economic Service cadre) அதிகாரியான பிகாஷ் கே.  மாலிக் முதலானவர்கள் இந்த ஆவ ணத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஊதியங்கள் சட்டம், ஒவ்வொரு மாநி லத்திலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யித்திட வேண்டும். இதனை நிர்ணயிப்ப தற்காக மத்திய தொழிலாளர்நல அமைச் சகம் பொது மக்களிடமிருந்தும், வல்லு நர்களிடமிருந்தும் கருத்துக்களை கோரியிருக்கிறது. அவற்றைப் பெற்று, ஆய்வு  செய்து, பின்னர் அது இறுதி விதி களை அறிவித்திட வேண்டும்.  

வீட்டு வேலைக்கு...
வீடுகளில் வேலை பார்க்கும் தொழி லாளர்கள் உட்பட அனைத்துத் தொழி லாளர்களுக்கும் அரசாங்கம் நிர்ண யிக்கும் விகிதத்தில் ஊதியம் வழங்கப் பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிகள், வீடுகளில் வேலை பார்த்திடும் தொழிலாளர்களுக்கு (domestic workers), வேலையளிப்பவர் – வேலை செய்பவர் ஆகியோருக்கு இடையே யான உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடித்துள்ளது. இந்தியாவில் தனியார் வீடுகளில் இத்த கைய தொழிலாளர்களுடன் எவ்வித மான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங் களும் கிடையாது.  “எந்தவொரு ஊழியரும் அல்லது ஊதியம் ஈட்டுபவரும் உலகளாவிய முறையில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஊதிய விதிகளுக்கு உட்பட்ட முறை யில் ஊதியம் வழங்கப்படுவதை உத்தர வாதப்படுத்த வேண்டும். இந்த அடிப் டையில் வீட்டுவேலை செய்திடும் தொழிலாளர்களுக்கும் ஊதியம் நிர்ண யிக்கப்பட வேண்டும்,” என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது.  வீடுகளில் வேலைக்கு வைக்கப்ப டும் தொழிலாளர்களிடமும் ஒருவித மான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும் என்று சத்பதி கூறினார். மேலும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்வித மான ஃபார்முலாவும் கூறப்படவில்லை என்றும் ஆவணம் சுட்டிக்காட்டி இருக் கிறது. மாறாக விதிகள் பரிந்துரைத் திருப்பது என்னவெனில், முத்தரப்புக் குழுவால் உணவு, உடை, வீட்டுவசதி செலவுகள் மற்றும் இதர காரணிகள் அடிப்படையில் பொருத்தமான ஊதியம் கணக்கிடப்படும் என்பது மட்டுமே யாகும்.

குறைந்தபட்ச ஊதியம்...
“இந்தியாவின் ஊதிய விதிகளை நிர்ணயிக்கும்போது, இந்தியா, குறைந்தபட்ச ஊதியம் முறைப்படுத்த லில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டுவந்த அனுபவத்தையும், கடந்த 24 ஆண்டுகளாக அமல்படுத்தி வந்த தேசிய அளவிலான அடிப்படை குறைந்தபட்ச ஊதிய (NFLMW-National Floor Level Minimum Wage) அனுபவத்தையும், அடிப்படைக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம்  செய்யும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட முடியாது,” என்றும் ஆவணத்தில் கூறப்பட்டிருக் கிறது. சத்பதி, 2018இல் வல்லுநர் குழு ஒன்றிற்குத் தலைமை வகித்திருந்தார். இந்தக் குழு, வயதுவந்த ஒரு நபர் நாள்தோறும் உட்கொள்ளவேண்டிய கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்களின் குறிப்பிட்ட அளவுகளுடன் உண்ணவேண்டிய சரி விகித உணவு குறித்தும், அதற்காகும் உணவு செலவினங்களைக் கணக்கிடு வது தொடர்பாகவும் ஒரு ஃபார்முலா வைத் தயாரித்து அளித்திருந்தது. மேலும் இந்தக்குழு, உடைகள், கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான செல வினங்களையும் சேர்த்திருந்தது. பின்னர் இது வீட்டிலுள்ளவரின் மனைவி, இரு குழந்தைகள் (இரு குழந்தைகள் ஒரு வயது வந்தவருக்கான செலவிற்குச் சமம்) மற்றும் வயது முதிர்ந்த பெற் றோர்கள் (இருவர் இருந்தால் அவர்கள் 0.6 வயதுடையவராக எடுத்துக்கொள்ள ப்படுவார்கள்). இவ்வாறு கணக்கிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிர்ண யிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை 3.6 பங்காக பெருக்கிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.  இதன் அடிப்படையில் அக்குழு 2018 ஜூலை விலைவாசிக் குறியீட்டெண் அடிப்படையில் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் நபர் ஒருவற்கு 375 ரூபாய் என்று பரிந்துரைத்தது. ஆயினும் இந்த அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரைவு விதிகளில், அடிப்படை ஊதி யம் மற்றும் அகவிலைப்படி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை மாற்றி யமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.       (ந.நி.)

;