tamilnadu

img

வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு விவசாயத்தை அழிக்கும் நெடுஞ்சாலைப் பணி.... தரங்கம்பாடி அருகே விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகே விவசாயத்தை அழித்து நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிதொடங்கியதைக் கண்டித்து, சாலைஅமைக்கும் பணிக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச்ஏ 45 நான்கு வழிச்சாலை) அமைக்க கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்ததையடுத்து நிலம் எடுக்கும்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.பிறகு கொரோனா ஊரடங்கால் எந்தவித பணியும் நடைபெறாத நிலையில், செவ்வாயன்று மாலை திடீரென தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தரங் கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி பகுதியிலுள்ள ஒரு விளைநிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீண்டும் பணியை மேற்கொள்ள துவங்கினர். இதை அறிந்த என்ஹெச்ஏ 45 பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி சம்பவஇடத்திற்கு சென்று,ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் சபிதாதேவி, பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும்போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்து அனுமதி பெறாமலேயே இப்போது நிலத்தில் பணிகள் தொடங்கியது தவறு என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வயலில் தோண்டிய பள்ளங்களை மூடிய பிறகுதான் கலைந்து செல்வோம் என கூறினர். இதனால் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடிவிட்டு ஜேசிபி இயந்திரத்தை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.ஒரு புறம் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு மற்றொரு புறம் விவசாயத்தை அழித்தொழிக்கும் வேலையில்ஈடுபடுகிறதா? என அப்பகுதி விவசாயிகள் கோபத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

;