tamilnadu

img

வாகனங்கள் விற்காததற்கு மாடல் சரியில்லாததே காரணம்... மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொல்கிறார்

புதுதில்லி:
வாகனங்கள், மெட்ரோ ரயில்களில் அதிகமானோர் பயணிக்கின்றனர்; விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; அவ்வாறிக்கையில் நாட்டில் பொருளாதார மந்தம் நிலவுகிறது என்று எப்படி சொல்ல முடியும்? என்று மத்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘அறிவுப்பூர்வமான’ கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை முன்பைப் போல இல்லை என்கிறார்கள். முதலில், ஆட்டோமொபைல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணி இல்லை. அப்படியே பார்த்தாலும், தில்லி மெட்ரோவில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, நாள் ஒன்றுக்கு 2.4 மில்லியன் பேர் பயணித்தார்கள். இன்று 6.5 மில்லியன் பேர் பயணிக்கின்றன. அதே போல ஓலா, ஊபர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.ஆட்டோமொபைலில் சில ரக வாகனங்கள் நன்றாக நிறைய விற்று இருக்கின்றன. ஆனால் சில மாடல்கள், நிறைய விற்பனை ஆகவில்லை. அதற்கு காரணம்,ஆட்டோமொபைல் மாடல்களில் சில டெக்னிக்கல் மாறுதல்களைச் செய்து கொண்டு இருப்பதுதான்.உலகிலேயே இந்தியாதான் 3-வது பெரிய சிவில் ஏவியேஷன் சந்தை. ஆண் டுக்கு சுமாராக 100 கோடி பயணிகள் விமானத்தில் பயணிக்கிறார்கள். அடுத்த சிலஆண்டுகளில், இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கூடுதலாக வர இருக்கிறது. 2018 - 19 ஆண்டு வாக்கில் ஜெட் ஏர்வேஸ்தன் சேவையை நிறுத்திக் கொண்டது. விமானங்கள் எண்ணிக்கை அப்போது, நாள் ஒன்றுக்கு சுமார் 600 விமானங்கள்தான் இருந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு 750-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்குகின்றன. தினமும் 2 முதல் 3 விமானங்கள் பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.இவற்றையெல்லாம் பார்த்தால் பொருளாதார மந்த நிலை போல தோன்றுகிறதா, என்ன?” என்று ஹர்தீப் சிங் பூரி கேட் டுள்ளார்.

;