tamilnadu

பாசிசம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது

சென்னை, ஆக. 10 - மாநில உரிமைகளைப் பறிக்கும் பாஜக வின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட் டத்தில் இடதுசாரிகள் கூர்முனையாக உள்ளோம். வலதுசாரிகள் ஒருபக்கம், இடது சாரிகள் ஒருபக்கம் என அரசியல் களம் கூர்மைப்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய் துள்ளது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்க ளாக பிரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்தி ற்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவ டிக்கையை கண்டித்தும், இடதுசாரித் தலை வர்கள் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா ஆகி யோரை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்ததைக் கண்டித்தும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - (எம்.எல்) லிப ரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வெள்ளியன்று (ஆக.9) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணுவக் குவிப்பு ஏன்?

இப்போராட்டத்தில் பேசிய சிபிஎம் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “மக்கள் நலனுக்காகவே 32 மசோதாக்களை நிறை வேற்றியதாக கூறும் ஆட்சியாளர்கள் பெண்க ளுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா வை நிறைவேற்றாதது ஏன்?  காஷ்மீரில் 1.25 கோடி மக்கள்  வசிக்கின்றனர். அந்த மக்க ளுக்கு நன்மை செய்வதென்றால் எதற்காக ஒரு லட்சம் ராணுவ வீரர்களை அங்கு குவிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். காஷ்மீரைப் போன்றே மிசோரம், இமாச லப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால் காஷ்மீர் மாநிலம் மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட் டில் செயல்படக் கூடிய யூனியன் பிரதேசங்க ளாக மாற்றப்பட்டுள்ளதை எப்படி ஏற்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி னார்.

இந்து நாடாக்கும் முயற்சி வெற்றி பெறாது

“மக்களவையில் பெரும்பான்மை பெற்றி ருப்பதால் பாஜக மதம் கொண்ட யானையை போல் செயல்படுகிறது. ஜனநாயக நெறி முறைகள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இந்தியாவை இந்து நாடாக்க முயற்சிக்கி றது. மதச்சார்பின்மையை சீர்குலைக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒன்றுமை காணும் இந்தியாவை, இந்து நாடாக்கும் பாசிஸ்ட்டுகளின் முயற்சி ஒருபோ தும் வெற்றி பெறாது” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

பொருளாதார அவசர நிலை
சிபிஐ (எம்எல்) லிபரேசன் மூத்த தலைவர் ஏ.எஸ். குமார் பேசுகையில், “பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 375, 35ஏ ஆகிய பிரிவு களை நீக்கி பாஜக அரசு, இந்தியாவிற்கு அவ மானத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பொருளாதார அவசரநிலை நீடிக்கிறது. வேலையின்மை, விவசாய நெருக்கடி, பங்கு சந்தை வீழ்ச்சி போன்றவற்றால்  மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை திசை திருப்ப பிரிவினையை தூண்டுகிறது. காஷ்மீ ரில் ராணுவத்தை குவித்து, தொலைதொடர்பு களை துண்டித்த போதும் அங்கு மக்கள் போ ராடிக் கொண்டு இருக்கிறார்கள்” என்றார். போராட்டத்தில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, சிபிஐ மாநில  துணைச் செயலாளர் மு.வீர பாண்டியன், மாநில நிர்வாகக்குழு உறுப்பி னர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் எம்.எஸ். மூர்த்தி (வடசென்னை), எஸ்.ஏழுமலை (சிபிஐ), சிபிஐ-எம்எல் (எல்) சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். மோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;