tamilnadu

img

1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு...  ஆசிய அளவில் முதலிடத்திற்கு முன்னேறிய துருக்கி...

அங்காரா  
210-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசிய ஆகிய மூன்று கண்டங்களில் அதிக சேதாரத்தை விளைவித்து வருகிறது. கொரோனா உருவான ஆசியக் கண்டத்தை விட ஐரோப்பா கண்டம் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஆசியக் கண்டத்தில் உள்ள இரண்டு தலைநகரைக் கொண்ட துருக்கியில்  கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. அங்கு இதுவரை  98 ஆயிரத்து 674 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,376 பேர் பலியாகியுள்ள நிலையில், 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் துருக்கி கொரோனா பாதிப்பில் ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. ஈரான் (85,996), சீனா (82,798) ஆகிய நாடுகள் 2  மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன. இந்தியா (21, 797) 4-வது இடத்தில் உள்ளது. 

பலி எண்ணிக்கையில் ஈரான் முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;