tamilnadu

img

சீன தொழிலதிபர் ஜாக்மா அமெரிக்காவுக்கு உதவி.... 5 லட்சம் பரிசோதனைக் கருவி, 10 லட்சம் சுவாசக் கவசம்

புதுதில்லி:
‘கோவிட்-19’ எனப்படும் கொரோனாவைரஸை பரப்பியதே அமெரிக்காவாகத் தான் இருக்கும் என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லிஜியான் அண்மையில் சந்தேகம் கிளப்பியிருந்தார். கொரோனா பாதிப்பு விஷயத்தில்அமெரிக்கா வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்கா பகிரங்கமாககூறாவிட்டாலும், கொரோனாவைக் கண்டறியும் கருவிகள் போதுமான அளவில் இல்லாமல் அமெரிக்கா திண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை என்று ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இவ்விஷயத்தில் டிரம்ப் அரசையும் அமெரிக்க பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக்மா அமெரிக்காவுக்கு உதவி செய்துள் ளார். கொரோனா பாதிப்புக்களை கண்டறியும் 5 லட்சம் கருவிகளையும், 10 லட்சம் சுவாசக் கவசங்களையும் வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “சொந்த நாடான சீனாவில் இருந்து கற்றுக்கொண்டதிலிருந்து சொல்கிறேன், இதுபோன்ற கொடிய வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மிக விரைவான மற்றும் துல்லியமான சோதனை முறைகளும் சாதனங்களும்தான் அவசியம். அமெரிக்காவில் இதற் கான தட்டுப்பாடு உள்ள நிலையில், தான் செய்யவுள்ள உதவி வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” என்று ஜாக்மா தெரிவித்துள்ளார்.மேலும் “இதுபோன்ற பேரழிவுகளைத் தனி நாடாக எதிர்கொள்ளமுடியாது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் எல்லைகள் கடந்து, ஒருவருக்கொருவர் தொழில்நுட்பத்தையும், செயல்முறைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தை பேரழிவிலிருந்து காக்கமுடியும்” என்றும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, முகநூல் மார்க்ஜூகர்பெர்க் 20 மில்லியன் டாலர் (147 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்குவதாகக் கூறியுள்ளார். ‘டெக் கிரன்ச்’ நிறுவனம் 10 மில்லியன் டாலரும், மைக்ரோசாப்ட் மற்றும்அமேசான் ஆகிய இரண்டும் தலா ஒருமில்லியன் டாலரும் நன்கொடை அறிவித்துள்ளன. கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இணைந்து ஒரு மில்லியன் டாலர் நன்கொடை அறிவித்துள்ளனர்.

;